Friday, April 20, 2012

அலைகள் ஓய்வதில்லை

power cut ஆனது
apartment முகங்கள் வெளிச்சத்துக்கு வந்தன
inverter வந்தது மீண்டும் முகங்கள்
இருளில் மூழ்கின

திருப்தி

என் கவிதைகளை,ஓவியங்களை,இசையை,பேச்சை,
எதையும் ரசிக்கவில்லை
என்னவன்
என்று கடிந்துகொண்டேன்
என்னை மட்டுமே அவன் ரசித்துக் கொண்டிருப்பது
தெரியாமல் ......

Sunday, October 17, 2010

நகரவாசி


அருவியும்,ஆற்றங்கரையும்,
புல்லும், நிலமும்,
மலையும், மாந்தோப்பும்,
குருவியும், குயிலும்,
வெயிலும், மழையும்,
மலரும், மாலையும்,
கவிதையில் கலக்கி
கணினியில் கொட்டி
கண் முன் இழக்கும்
மூடர்கள்......

Saturday, September 18, 2010

ரசனை

உனக்காக
நீ ரசிப்பதெல்லாம்
நான் ரசிப்பதில்லை
நீ எனக்கு முன்னதாக அவற்றை
கண்டுகொண்டாய்
அவ்வளவே ...

பெருந்தன்மை

ஏமாற்றத்தை நேர்கொள்ளும்
போதிலும் பெருந்தன்மையோடு
புன்னகைக்கும் மேன்மக்களை
நினைவூட்டுகிறது
அவள் இதழில் தவழவிட்ட
புன்னகை
மிகச்சிறியவளாகிறேன்
விளையாடும் நோக்கத்தில்
அவள் பொம்மையை பிடுங்கி
அழவைக்க நினைத்தமையால் ..

Monday, August 23, 2010

அமுதை மறுத்தவள்


கதை பருகும் ஆசையில்
வேகமாய் திருப்பிய பக்கங்கள்
நுனிப்புல் மேய்ந்த கண்கள்
நடு நிசி சொப்பனத்தில்
திடுமென எழுந்ததை போல்
மணம் ஒரு நொடி நகராமல் நிற்க
நீர் மறுத்து பால் உண்ணும் அன்னத்தை ஒத்து
தமிழ் விடுத்து கதை படித்த
அறியாமையை
அரை கிணறு தாண்டியதும்
உணர்ந்தனள் இவள்
அமுதை மறந்த நள் என்று ....

மீண்டும் பிறக்கிறேன்


முன்னோக்கி நகரும்போதே,
பின்னோக்கி நகரும் மரங்களோடு
பயணிக்கிறேன்
புறக்கணிக்கப்பட்ட கடந்தகாலத்துக்கு

அடைபட்ட கண்களுக்குள்
இருந்த சோகம்
நீராய் கசிய,
அரும்பொன்று கண் துடைக்கிறது
மெலிதாய் புன்னகைத்தபடி
மலடி என்ற பட்டமும் துடைக்கப்பட்டது .....

இமை தாழ் திறக்கிறேன்
வரவேற்கிறது மழலை
என் எதிர்காலத்தில்
ஒளி வீசியபடி