Sunday, October 17, 2010

நகரவாசி


அருவியும்,ஆற்றங்கரையும்,
புல்லும், நிலமும்,
மலையும், மாந்தோப்பும்,
குருவியும், குயிலும்,
வெயிலும், மழையும்,
மலரும், மாலையும்,
கவிதையில் கலக்கி
கணினியில் கொட்டி
கண் முன் இழக்கும்
மூடர்கள்......

Saturday, September 18, 2010

ரசனை

உனக்காக
நீ ரசிப்பதெல்லாம்
நான் ரசிப்பதில்லை
நீ எனக்கு முன்னதாக அவற்றை
கண்டுகொண்டாய்
அவ்வளவே ...

பெருந்தன்மை

ஏமாற்றத்தை நேர்கொள்ளும்
போதிலும் பெருந்தன்மையோடு
புன்னகைக்கும் மேன்மக்களை
நினைவூட்டுகிறது
அவள் இதழில் தவழவிட்ட
புன்னகை
மிகச்சிறியவளாகிறேன்
விளையாடும் நோக்கத்தில்
அவள் பொம்மையை பிடுங்கி
அழவைக்க நினைத்தமையால் ..

Monday, August 23, 2010

அமுதை மறுத்தவள்


கதை பருகும் ஆசையில்
வேகமாய் திருப்பிய பக்கங்கள்
நுனிப்புல் மேய்ந்த கண்கள்
நடு நிசி சொப்பனத்தில்
திடுமென எழுந்ததை போல்
மணம் ஒரு நொடி நகராமல் நிற்க
நீர் மறுத்து பால் உண்ணும் அன்னத்தை ஒத்து
தமிழ் விடுத்து கதை படித்த
அறியாமையை
அரை கிணறு தாண்டியதும்
உணர்ந்தனள் இவள்
அமுதை மறந்த நள் என்று ....

மீண்டும் பிறக்கிறேன்


முன்னோக்கி நகரும்போதே,
பின்னோக்கி நகரும் மரங்களோடு
பயணிக்கிறேன்
புறக்கணிக்கப்பட்ட கடந்தகாலத்துக்கு

அடைபட்ட கண்களுக்குள்
இருந்த சோகம்
நீராய் கசிய,
அரும்பொன்று கண் துடைக்கிறது
மெலிதாய் புன்னகைத்தபடி
மலடி என்ற பட்டமும் துடைக்கப்பட்டது .....

இமை தாழ் திறக்கிறேன்
வரவேற்கிறது மழலை
என் எதிர்காலத்தில்
ஒளி வீசியபடி

ஒப்பாரி


நோய் தாக்கி வெக்காம தடுப்பூசி
போட்டு வெச்சேன்
சேய் தாக்கி போனதென்ன
யமனா மாறி போட்ட வேலி
மகராசி நீ இந்த
பூமி ஆள பிடிக்காம
வானுலக தேவதையா
மாரித்தான் போனியோடி
தாலாட்டு பாடி உன்ன
தொட்டிலிலே தூங்க வெச்சேன்
ஒப்பாரி பாடி உன்ன
இடுகாட்டில் பொதைக்கவெச்ச


(தடுப்பூசி போட்டதனால், சில குழந்தைகள் இறந்த செய்தி கேட்டு ...)

Thursday, August 5, 2010

முரண்


பேசாதே என்று
ஆணையிட்டுவிட்டு
பதில் கூறவில்லை
என்று கடிந்துக்கொள்கிறாய் !!!!

Monday, August 2, 2010

அறிந்தவர் எவரோ ??


யானையை தொட்டுணர்ந்த
குருடர் கதை போல் ஆனது
என்னை புரிந்தவர்கள் என்று
கூறுவர் கருத்து...
உண்மையானாலும் முழுமை இல்லை...

வலி

ஆழமாய் ஏற்படுத்திய காயத்துக்கு

மன்னிப்பு கேட்டுவிட்ட நிம்மதி இருப்பினும்

மரணித்துக்கொண்டிருக்கின்றேன்

வடுக்களை பார்த்தபடி வலித்திருக்கும் என் தோழனுக்கென்று…

கலைந்த கனவு


அன்றுன் மனதை
கொண்டென் என் மௌனம்
உடைத்தாய் ...
இன்றுன் மௌனம்
கொண்டென் மனதை
உடைக்கின்றாய்...

தேடி வந்த மனதை
உன்னிடம் தொலைக்க
துணிந்த பேதை
இவள் கண்ணன்
இழந்த கோதை...
இருட்டிலே
ஒரு வெளிச்சம் ஒளித்துவைக்க
திட்டம் தீட்டி
தினம் தோற்கின்ற ராதை...

Saturday, July 10, 2010

நினைத்த நொடி முதல் மறக்கவில்லை


உனக்கு அனுப்பும் செய்திகளைக்
கொண்டு உன்னை நினைத்த நொடிகளை
கணக்கெடுக்கிறாய்
நானே கூறுகிறேன் கேள்
ஒரு முறைதான் என்று...

Thursday, July 8, 2010

வெல்கிறது காதல்


உன்னோடு கோபம் கொண்டு
"இனி பேசக் கூடாது "
என்ற முடிவெடுக்கும்போதே
உன்னிடம் சொல்ல
ஆயிரம் செய்திகள் உருவெடுக்கிறது
என் மனதில்
மீண்டும் மீண்டும்
உன் மீதான கோவத்தை காதல் வென்றுவிடுகிறது
எப்போதும் போல் நான் மட்டும் தோற்று
உரையாடலை ஆரம்பித்து வைக்கிறேன்

Friday, July 2, 2010

வாழ்க்கை

இலக்கில்லா பயணங்கள்,
முடிவில்லா தேடல்கள்,
தீர்மானிக்கப்படா தருணங்கள்,
தொடர்ந்து வர எண்ணும் நொடியில்,
துண்டிக்கப்படும் தொடர்புகள்...

Thursday, June 17, 2010

சொல்லி விடு

உண்மைகளை உதறிவிட்டு
பொய்களுக்கு ஒப்பனை செய்வதே
மானுடர்க்கு வேலையானது

இன்று நானும் அந்த வரிசையில்
...........
நாளை நீயாகவும் இருக்கலாம்
காலம் கைது செய்வதற்குமுன்
சொல்லவந்ததை சொல்லி விடு

Tuesday, April 6, 2010

கனவில் அரங்கேறிய ஆசைகள்


நெற்றி முகட்டில்
"டி" முட்டி முத்தமிட்டேன்
பசுவிற்கு
பச்சை பட்டென உடுத்த முயன்ற
புல்வெளியில் உருண்டு
வெள்ளி ஓடையில்
தவறி விழுந்தேன்
மான் குட்டி மத்தியில்
கண்ணாமூச்சி ஆடி
மேகங்களில் ஏறி பயணிக்கிறேன்
ம்ம்ம் இப்போது சவப்பெட்டியில்
உயிரோடு உறங்குகிறேன்

Saturday, April 3, 2010

பேருந்து பயணம்


"கொஞ்சம் இவள பிடிங்களேன் .."
என்று சொல்லி முடிப்பதற்குள்
தாவி வந்த குட்டி தேவதையை
மடியில் அமர்த்திக்கொண்டேன்

என் துப்பட்டாவும் , கைப்பேசியும்
அவளை வெகுவாய் ஈர்த்திருக்க கூடும்
கைகளில் பற்ற முயன்றுக்கொண்டே
மழலை மொழியில் ஏதேதோ பேச

அவள் பேச்சுக்கு போட்டியிட வந்த
அருகிலுருந்தவரின் "i-pod "
உமிழ்ந்த இசையெல்லாம்
தோற்றுதான் போனது

திடுமென பின் இருக்கையில்
இருந்த பிஞ்சு விரல் ஒன்று
என் கன்னம் வருட
போட்டியிட்டு தோல்வியுற
தென்றலும் தீண்டி சென்றது என்னை

நிறுத்தம் வந்தும் இறங்க மனமில்லாமல்
நினைவுகளை அங்கேயே நிறுத்தி வைத்துவிட்டு
நான் மட்டும் இறங்கி சென்றேன்...

தயவு காட்டு


சடங்குகள் மட்டுமே
காட்சியாகியிருக்கிறது
நிர்பந்தம் ஏதுமில்லை
அது அவளுக்கான
இருக்கையாகவே இருந்து
விட்டு போகட்டும்
உன் தாரமாக
உரிமையளிக்கும் வரை
தாயாய் இருக்கிறேன்
தயவு காட்டு

சில நேரங்களில்


விட்டு கொடுத்து
வாழ்வது
என் சுபாவம்தான்
வாழ்வையே கொடுத்துவிட்டேன்
வாழச்சொல்கிறாய்
*****************************************
இல்லாதவனுக்குதான்
கொடுக்கும் மனமிருக்குமாம்
என்னிடம் இல்லாத மனதை
உனக்கு கொடுக்க துடிக்கின்றேன்

நீ அதை எப்போதோ
பறித்துக்கொண்டாய்
உணராமல்

******************************************
நீ
அனுப்பிய
புகழ் பெற்ற எழுத்தாளரின்
கவி தொகுப்பும்

பொக்கிஷமாய்
நான் சேமித்து வைத்திருக்கும்
குறுஞ்செய்திகளும்

மட்டுமே மிஞ்சியிருக்கின்றன
நீ இல்லாத தருணங்களில்
உன் நினைவாக
********************************************

Friday, March 26, 2010

காலம் பதில் சொல்லும்

யாருக்கோ எழுதிய கவிகளில்
என்னை பொருத்தி இன்பம் கொள்கிறேன்

யாருக்கோ காதல் சொல்ல
என்னிடம் ஒத்திகை பார்த்தாய்
நாடகமென்று அறிந்தும்
மதி மயங்குகிறேன்

உன்னிடம் பேச வந்த வார்த்தைகள்
கருவிலேயே இறந்து விடுகின்றன
காகிதத்தில் இரக்க, கோர்வையாய் வரவில்லை
சொல்லி அழ தைரியம் இல்லை
சொன்னால் தீரும் துயரம் இல்லை

நட்பெனும் காந்தம்
நமை ஈர்த்தது அன்று
காதலாக அது
நகர்ந்தது என்று?

நட்பெனும் போர்வைக்குள்
காதல் வளர்ப்பதால்
குற்ற உணர்ச்சி கொல்கிறது

எதை துண்டிப்பது?
காதலையா, நட்பையா?
என்ற குழப்பத்தில் நான்...

எதை செய்தபோதும் எனை
தண்டித்துவிடாதே என்ற
வேண்டுகோள் மட்டும் விடுக்கின்றேன்
காலத்தின் பதிலை எதிர்நோக்கி
காத்திருப்புகள் தொடர்கிறது...

Saturday, March 20, 2010

புரிதல்

புரியாதவைகளில் புதைந்து போயிருந்தேன்
முட்டி மோதி போராடி புரிந்துக்கொள்ள
முயற்சித்தபோது
புரிதலின் ஆரம்பமே
கபடமற்ற உள்ளத்தை இழப்பது
என்பது புரிந்தது
முயற்சியை தொடர்வதா வேண்டாமா
என்ற சிந்தனையில்
நாட்கள் மட்டும் தொடர்கின்றன
விந்தையான உலகமிது
முட்டாளுக்கும் அப்பாவிக்கும்
மயிரிழை வேறுபாடு காட்டி
என்னை மாயையில்
ஆழ்த்துகிறது

யார் இவன் ...


கண்ணீர் துடைக்க காயம் தந்தவனா?
கண்கள் தடுக்க நாணம் தந்தவனா?
கரங்கள் பிடிக்க காதல் தந்தவனா?

பிழைகளை ரசிக்கின்றான்
இதயம் வருடுகிறான்
வெளியே சென்றாலும்
என் உள்ளே வசிக்கின்றான்

விழி வாசல் கடந்து
உள்ளம் திருடுகிறான்
அவன் மொழிகளில்
நேசம் கலந்தே பேசுகிறான்

யாரென்று அவனை
நானும் கேட்கின்றேன்

புன்னகை மட்டும்
பதிலாய் தந்து சென்றான்
.......

Wednesday, March 17, 2010

மட்டும்

பேச எதுவுமே இல்லை
என்றபோதும் தொடர்பை
துண்டிக்க மனமில்லை கைபேசியில்

உன் மூச்சுக்காற்றை மட்டுமாவது கேட்கிறேனே ...

சிரிக்கும் கண்ணீர் துளிகள்

உரக்க உதிர்க்கும் சொற்களுக்கு
உயிர் உள்ளதோ இல்லையோ
மௌனங்கள் கூச்சலிட்டுக் கொண்டே இருக்கும்..

உனக்கு புரிய வைக்க
மொழிகளால் இயலவில்ல
மௌனம் பேசியதை
உணர்ந்தபோதும் நீ
அறிந்ததாய் காட்டிக்கொள்ளவில்லை

அறிந்தும் அறியாமலும்
காவியமாகிறது காதல்
ஏட்டில் மட்டும் உயிர் பெற்று......
உண்மையில் உயிர் விடுகிறது
சில கண்ணீர் துளிகள்
முற்றுப்ப் புள்ளி இடுகிறது தொடர்ந்து......

எப்போதும் போல்

புன்னகை மலரச்செய்து
பூந்தோட்டம் பரிசளித்தேன்
எப்போதும் போல் நீ கண்ணீர் கொடுக்கிறாய்
கவலையில்லை எனக்கு
காரணம், அதை கொண்டே தோட்டத்திற்கு
நீர் பாய்ச்சுகிறேன்
கண்ணீரெல்லாம் கண் காண வேருக்கு சென்று
புன்னகை மட்டும் மலர்கிறது நீ காண

Thursday, March 4, 2010

சிரிக்கும் கண்ணீர் துளிகள்

உரக்க உதிர்க்கும் சொற்களுக்கு
உயிர் இருக்கிறதோ இல்லையோ
மௌனங்கள் கூச்சலிட்டுக்கொண்டே இருக்கும்..

உனக்கு புரிய வைக்க
மொழிகளால் இயலவில்லை
மௌனம் பேசியதை
உணர்ந்ந்தும் நீ அறிந்ததாய் காட்டிக்கொள்ளவில்லை

அறிந்தும் அறியாமலும்
காவியமாகிகறது காதல்
ஏட்டில் மட்டும் உயிர் பெற்று .....
உண்மையில் உயிர் விடுகிறது
சில கண்ணீர் துளிகள்
முற்றுப் புள்ளி இடுகிறது தொடர்ந்து .........

Saturday, February 27, 2010

some baby is disturbing me in my dream

விடியற்காலை பொழுதாகி போகும்
உறக்கம் கலைக்க மனமில்லை,
கனவில் வந்து தலை கோதும் குழந்தை
எனதா என்று தெரியவில்லை,
கற்பிக்க சொல்லி கற்றுக் கொடுக்கும்
குருவா எனக்கு புரியவில்லை
கைகள் பற்றி, புது உலகம்
காட்டும் ஒளிக்கு அங்கே பஞ்சமில்லை
பகலில் என்னை பிரிந்திருகிறதே
தனிமை அதற்கு பயமில்லை
இரவு வரும்வரை காத்திருக்கின்றேன்
மீண்டும் பூ முக தரிசனம் தாராய் ..

Friday, February 26, 2010

கள்ளி

கண்ணே நீ
கண்ணுறங்கி நான் கண்டதே இல்லையே?
என்றான் என் கண்ணாளன்...
இரவு முழுவதும் நான் உறங்குவதை, நீ ரசித்துக்கொண்டிருந்தது
எனக்கு தெரியும் ..ஏன் பொய்யுரைக்கிறாய் ?
என்றேன்
காரிருளிலும் என் கண்கள் உன்னை கண்டதை
நீ உறங்கியிருந்தால் எவ்வாறு அறிந்துப்பாய்?
என்றான்
அகப்பட்டுக்கொண்ட கள்ளியாய் நான்...

கொல்கிறேன் காதலை

ஏமாற்றிய காதலன் தன் மனைவியோடு
வருகையில்,
அப்பா என்று அழைக்கச் செல்லும் தன குழந்தையை
வாய் பொத்தி கூட்டிச் செல்லும்
பேதை போல

உன் காதல் கை கூட
என்னிடம் யோசனை
கேட்கும் போதெல்லாம்
அமிழ்த்துக் கொல்கிறேன்
என் காதலை
புன்னகைத்துக் கொண்டே...

பொறாமை

நீ என் நிழலோடு பேசிக்கொண்டிருக்கிறாய் ,
நான் அருகில் இருப்பதை உணராமல்
என் நிழற்படம் மீது பொறாமை கொள்கிறேன் நான்..

நீ..நான்

நீ என்னை தேடிக் கொண்டிருக்கிறாய்.
..நான் உனக்குள் ஒளிந்துக் கொண்டிருக்கிறேன் ..

கிள்ளி எரிகிறேன்

உன்னிடம் சொல்ல எனக்குதான் தகுதி இல்லை,
ஒவ்வொரு முறை துளிர்க்கும் போதும் கிள்ளி எரிகிறேன் ,
வேரை எடுக்க மனமில்லை ,
என்னுள் மட்டுமாவது வாழ்ந்து விட்டு போகட்டுமே ,
என் காதல் ...

Tuesday, February 23, 2010

காதல்

முகவுரைக்கு காரணங்கள் தேவை படவில்லை,
முடிவுரைக்கு காரணங்கள் தெரியப்படுத்தபடவில்லை ..