Friday, March 26, 2010

காலம் பதில் சொல்லும்

யாருக்கோ எழுதிய கவிகளில்
என்னை பொருத்தி இன்பம் கொள்கிறேன்

யாருக்கோ காதல் சொல்ல
என்னிடம் ஒத்திகை பார்த்தாய்
நாடகமென்று அறிந்தும்
மதி மயங்குகிறேன்

உன்னிடம் பேச வந்த வார்த்தைகள்
கருவிலேயே இறந்து விடுகின்றன
காகிதத்தில் இரக்க, கோர்வையாய் வரவில்லை
சொல்லி அழ தைரியம் இல்லை
சொன்னால் தீரும் துயரம் இல்லை

நட்பெனும் காந்தம்
நமை ஈர்த்தது அன்று
காதலாக அது
நகர்ந்தது என்று?

நட்பெனும் போர்வைக்குள்
காதல் வளர்ப்பதால்
குற்ற உணர்ச்சி கொல்கிறது

எதை துண்டிப்பது?
காதலையா, நட்பையா?
என்ற குழப்பத்தில் நான்...

எதை செய்தபோதும் எனை
தண்டித்துவிடாதே என்ற
வேண்டுகோள் மட்டும் விடுக்கின்றேன்
காலத்தின் பதிலை எதிர்நோக்கி
காத்திருப்புகள் தொடர்கிறது...

Saturday, March 20, 2010

புரிதல்

புரியாதவைகளில் புதைந்து போயிருந்தேன்
முட்டி மோதி போராடி புரிந்துக்கொள்ள
முயற்சித்தபோது
புரிதலின் ஆரம்பமே
கபடமற்ற உள்ளத்தை இழப்பது
என்பது புரிந்தது
முயற்சியை தொடர்வதா வேண்டாமா
என்ற சிந்தனையில்
நாட்கள் மட்டும் தொடர்கின்றன
விந்தையான உலகமிது
முட்டாளுக்கும் அப்பாவிக்கும்
மயிரிழை வேறுபாடு காட்டி
என்னை மாயையில்
ஆழ்த்துகிறது

யார் இவன் ...


கண்ணீர் துடைக்க காயம் தந்தவனா?
கண்கள் தடுக்க நாணம் தந்தவனா?
கரங்கள் பிடிக்க காதல் தந்தவனா?

பிழைகளை ரசிக்கின்றான்
இதயம் வருடுகிறான்
வெளியே சென்றாலும்
என் உள்ளே வசிக்கின்றான்

விழி வாசல் கடந்து
உள்ளம் திருடுகிறான்
அவன் மொழிகளில்
நேசம் கலந்தே பேசுகிறான்

யாரென்று அவனை
நானும் கேட்கின்றேன்

புன்னகை மட்டும்
பதிலாய் தந்து சென்றான்
.......

Wednesday, March 17, 2010

மட்டும்

பேச எதுவுமே இல்லை
என்றபோதும் தொடர்பை
துண்டிக்க மனமில்லை கைபேசியில்

உன் மூச்சுக்காற்றை மட்டுமாவது கேட்கிறேனே ...

சிரிக்கும் கண்ணீர் துளிகள்

உரக்க உதிர்க்கும் சொற்களுக்கு
உயிர் உள்ளதோ இல்லையோ
மௌனங்கள் கூச்சலிட்டுக் கொண்டே இருக்கும்..

உனக்கு புரிய வைக்க
மொழிகளால் இயலவில்ல
மௌனம் பேசியதை
உணர்ந்தபோதும் நீ
அறிந்ததாய் காட்டிக்கொள்ளவில்லை

அறிந்தும் அறியாமலும்
காவியமாகிறது காதல்
ஏட்டில் மட்டும் உயிர் பெற்று......
உண்மையில் உயிர் விடுகிறது
சில கண்ணீர் துளிகள்
முற்றுப்ப் புள்ளி இடுகிறது தொடர்ந்து......

எப்போதும் போல்

புன்னகை மலரச்செய்து
பூந்தோட்டம் பரிசளித்தேன்
எப்போதும் போல் நீ கண்ணீர் கொடுக்கிறாய்
கவலையில்லை எனக்கு
காரணம், அதை கொண்டே தோட்டத்திற்கு
நீர் பாய்ச்சுகிறேன்
கண்ணீரெல்லாம் கண் காண வேருக்கு சென்று
புன்னகை மட்டும் மலர்கிறது நீ காண

Thursday, March 4, 2010

சிரிக்கும் கண்ணீர் துளிகள்

உரக்க உதிர்க்கும் சொற்களுக்கு
உயிர் இருக்கிறதோ இல்லையோ
மௌனங்கள் கூச்சலிட்டுக்கொண்டே இருக்கும்..

உனக்கு புரிய வைக்க
மொழிகளால் இயலவில்லை
மௌனம் பேசியதை
உணர்ந்ந்தும் நீ அறிந்ததாய் காட்டிக்கொள்ளவில்லை

அறிந்தும் அறியாமலும்
காவியமாகிகறது காதல்
ஏட்டில் மட்டும் உயிர் பெற்று .....
உண்மையில் உயிர் விடுகிறது
சில கண்ணீர் துளிகள்
முற்றுப் புள்ளி இடுகிறது தொடர்ந்து .........