Monday, August 23, 2010

அமுதை மறுத்தவள்


கதை பருகும் ஆசையில்
வேகமாய் திருப்பிய பக்கங்கள்
நுனிப்புல் மேய்ந்த கண்கள்
நடு நிசி சொப்பனத்தில்
திடுமென எழுந்ததை போல்
மணம் ஒரு நொடி நகராமல் நிற்க
நீர் மறுத்து பால் உண்ணும் அன்னத்தை ஒத்து
தமிழ் விடுத்து கதை படித்த
அறியாமையை
அரை கிணறு தாண்டியதும்
உணர்ந்தனள் இவள்
அமுதை மறந்த நள் என்று ....

மீண்டும் பிறக்கிறேன்


முன்னோக்கி நகரும்போதே,
பின்னோக்கி நகரும் மரங்களோடு
பயணிக்கிறேன்
புறக்கணிக்கப்பட்ட கடந்தகாலத்துக்கு

அடைபட்ட கண்களுக்குள்
இருந்த சோகம்
நீராய் கசிய,
அரும்பொன்று கண் துடைக்கிறது
மெலிதாய் புன்னகைத்தபடி
மலடி என்ற பட்டமும் துடைக்கப்பட்டது .....

இமை தாழ் திறக்கிறேன்
வரவேற்கிறது மழலை
என் எதிர்காலத்தில்
ஒளி வீசியபடி

ஒப்பாரி


நோய் தாக்கி வெக்காம தடுப்பூசி
போட்டு வெச்சேன்
சேய் தாக்கி போனதென்ன
யமனா மாறி போட்ட வேலி
மகராசி நீ இந்த
பூமி ஆள பிடிக்காம
வானுலக தேவதையா
மாரித்தான் போனியோடி
தாலாட்டு பாடி உன்ன
தொட்டிலிலே தூங்க வெச்சேன்
ஒப்பாரி பாடி உன்ன
இடுகாட்டில் பொதைக்கவெச்ச


(தடுப்பூசி போட்டதனால், சில குழந்தைகள் இறந்த செய்தி கேட்டு ...)

Thursday, August 5, 2010

முரண்


பேசாதே என்று
ஆணையிட்டுவிட்டு
பதில் கூறவில்லை
என்று கடிந்துக்கொள்கிறாய் !!!!

Monday, August 2, 2010

அறிந்தவர் எவரோ ??


யானையை தொட்டுணர்ந்த
குருடர் கதை போல் ஆனது
என்னை புரிந்தவர்கள் என்று
கூறுவர் கருத்து...
உண்மையானாலும் முழுமை இல்லை...

வலி

ஆழமாய் ஏற்படுத்திய காயத்துக்கு

மன்னிப்பு கேட்டுவிட்ட நிம்மதி இருப்பினும்

மரணித்துக்கொண்டிருக்கின்றேன்

வடுக்களை பார்த்தபடி வலித்திருக்கும் என் தோழனுக்கென்று…

கலைந்த கனவு


அன்றுன் மனதை
கொண்டென் என் மௌனம்
உடைத்தாய் ...
இன்றுன் மௌனம்
கொண்டென் மனதை
உடைக்கின்றாய்...

தேடி வந்த மனதை
உன்னிடம் தொலைக்க
துணிந்த பேதை
இவள் கண்ணன்
இழந்த கோதை...
இருட்டிலே
ஒரு வெளிச்சம் ஒளித்துவைக்க
திட்டம் தீட்டி
தினம் தோற்கின்ற ராதை...