Friday, March 26, 2010

காலம் பதில் சொல்லும்

யாருக்கோ எழுதிய கவிகளில்
என்னை பொருத்தி இன்பம் கொள்கிறேன்

யாருக்கோ காதல் சொல்ல
என்னிடம் ஒத்திகை பார்த்தாய்
நாடகமென்று அறிந்தும்
மதி மயங்குகிறேன்

உன்னிடம் பேச வந்த வார்த்தைகள்
கருவிலேயே இறந்து விடுகின்றன
காகிதத்தில் இரக்க, கோர்வையாய் வரவில்லை
சொல்லி அழ தைரியம் இல்லை
சொன்னால் தீரும் துயரம் இல்லை

நட்பெனும் காந்தம்
நமை ஈர்த்தது அன்று
காதலாக அது
நகர்ந்தது என்று?

நட்பெனும் போர்வைக்குள்
காதல் வளர்ப்பதால்
குற்ற உணர்ச்சி கொல்கிறது

எதை துண்டிப்பது?
காதலையா, நட்பையா?
என்ற குழப்பத்தில் நான்...

எதை செய்தபோதும் எனை
தண்டித்துவிடாதே என்ற
வேண்டுகோள் மட்டும் விடுக்கின்றேன்
காலத்தின் பதிலை எதிர்நோக்கி
காத்திருப்புகள் தொடர்கிறது...

1 comment: